என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் தீக்குளிக்க முயற்சி"
தருமபுரி செங்கொடிபுரம் பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மனைவி ராணி. இவர்களது மகன் சிவா. இவர் வாய்பேச முடியாதவர்.
இன்று காலை நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு ராணி கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார்.
அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர் ராணியை தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் கூறியதாவது:-
நான் தருமபுரி செங்கொடிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனது கணவர் முனியப்பன் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளார். இதனை நான் பலமுறை கண்டித்துள்ளேன். நமக்கு வாய் பேச முடியாத மகன் உள்ளார். அதனை கருத்தில் கொண்டு கள்ளத்தொடர்பை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் இதுவரை அவர் கேட்கவில்லை.
இது குறித்து நான் மாவட்ட கலெக்டரிடம் 2 முறை மனு கொடுத்தேன். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் எனது கணவர் முனியப்பன் என்னிடம் இருந்த சொத்துக்களை எல்லாம் எழுதி வாங்கினார். பின்னர் தினமும் என்னை வீட்டில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினார். இதனால் எனது கணவர் முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களது குறைகளை கோரிக்கை மனுக்களாக கலெக்டரிடம் கொடுக்க வந்திருந்தனர்.
அப்போது 3 குழந்தைகளுடன் வந்திருந்த பெண் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை எடுத்து குழந்தைகள் மீதும், அவர் மீதும் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணை தீக்குளிக்க விடாமல் தடுத்தனர். கையில் வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலையும் கைப்பற்றினர்.
பின்னர் அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் விழுப்புரம் வி.மருதூர் பகுதியை சேர்ந்த கோபி என்பவரது மனைவி வள்ளியம்மை (வயது 29) என்பதும், இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ள விவரம் தெரிய வந்தது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். கடந்த மாதம் ஊருக்கு வந்தார். அவருக்கு அவரது தாயும், தந்தையும் சேர்ந்து 2-வது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
இதையறிந்த நான், இனி உயிர் வாழ்வதை விட சாவதே மேல் என்று எண்ணினேன். இந்த நிலையில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க முடிவு செய்தேன். அதற்காக 3 குழந்தைகளுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் வந்தேன்.
மிகுந்த மனவேதனையில் இருந்த நான் மண்எண்ணையை எனது குழந்தைகள் மீதும் ஊற்றி, நானும் தீக்குளிக்க முயன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து வள்ளியம்மையை விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
3 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Villupuramcollectoroffice
கடலூர்:
கடலூர் புதுப்பாளையத்தில் கெடிலம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டு இருந்தன. மழைக்காலங்களில் இந்த ஆற்றங்கரையோரம் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அப்போது வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டு வந்தது.
இதனை தடுக்க கெடிலம் ஆற்றங்கரையை பலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கெடிலம் ஆற்றங்கரையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடு மற்றும் கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதனை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் தீக்குளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை புதுப்பாளையம் காமராஜர் நகரில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடிப்பதற்காக பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் வந்தனர்.
அங்கு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதையறிந்த அந்த பகுதி பெண்கள் உள்பட ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் இன்று இடிக்கப்படும் என்று உங்களுக்கு ஏற்கனவே நோட்டீசு அனுப்பி உள்ளோம். அதன்படிதான் இன்று வந்துள்ளோம். எனவே, இந்த பணியை யாரும் தடுக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் அதிகாரிகள் கூறினர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த ராதா (வயது 69) என்ற பெண் திடீரென்று தான் கையில் வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார், ராதாவின் கையில் இருந்த மண்எண்ணை பாட்டிலை பறித்தனர். அந்த பெண்ணின் உடலில் தண்ணீரை ஊற்றினர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி தொடங்கியது. இதனை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளை இடிக்கக்கூடாது என்று கோஷமிட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இதன் பின்னர் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிக்கப்பட்டன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்